திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

72 வயதிலும் ரஜினிக்கு போட்டி போட்டு வரும் டாப் இயக்குனர்கள்.. ஷங்கரின் மூளையை திசை திருப்பிய ஜெயிலர் வெற்றி

Director Shankar and Rajini: இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்களை இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படங்கள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படமான வேள்பாரி வரலாறு படத்தை எடுக்கப் போகிறார் என பல செய்திகள் கொஞ்ச நாட்களாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் ஹீரோவை தேர்ந்தெடுக்க முயற்சி எடுத்தார். ஆனால் தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியை பார்த்த பிறகு இவருடைய மூளை கொஞ்சம் திசை திரும்பி விட்டது. அதாவது ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மூளை முடுக்கு எல்லாம் பட்டையை கிளப்பிக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

Also read: ஏழைகள் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்ளும் அதிதி சங்கர்.. வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது ஒரு பொழப்பா?

இதை தொடர்ந்து ரஜினியின் 172 படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது இதில் சில மாற்றங்கள் நடக்கப் போவதாக தெரிய வருகிறது. அதாவது ரஜினியின் 172 வது படத்தை ஷங்கர் இயக்கப் போவதாக தற்போது செய்திகள் வெளி வருகிறது. அதற்கு காரணம் ஜெயிலர் படத்தின் வெற்றியை பார்த்ததால் ஷங்கர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

அதாவது ஷங்கர் இயக்க இருக்கும் வேள்பாரி வரலாறு படத்தில் ரஜினி நடித்தால் கண்டிப்பாக கோடிக்கணக்கான வசூலை பார்க்கலாம் என்று அவருடைய மூளைக்கு எட்டியுள்ளது. இதனால் இப்படத்தில் ஹிந்தி நடிகர்களை நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதனால் கண்டிப்பாக ரஜினி தான் வேள்பாரி படத்தில் நடிப்பதற்கான முழு வாய்ப்பும் இருக்கிறது.

Also read: ரஜினி, இளையராஜா கூட்டணியில் வெற்றி கண்ட 6 பாடல்கள்.. ஒரே ஒரு பாட்டில் மொத்தமாய் ஸ்கோர் செய்த சூப்பர் ஸ்டார்

அப்படி இருந்தால் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி இவர்களுடைய காம்பினேஷன் வசூல் அளவில் வெளுத்து வாங்கும். ஆனால் ரஜினியின் வயதுக்கு இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடந்து வருவது, டயலாக் பேசுவது சாத்தியமாகுமா என்பது ஒரு சின்ன குழப்பங்கள் இருந்து வருகிறது.

மேலும் வரலாற்று படம் என்பதால் அதற்கேற்ற உடைமைகளை ரஜினியால் அணிய முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இல்லையென்றால் சிவாஜி மாதிரி ஒரு படத்தை கொடுக்கப் போகிறாரா என்ற சந்தேகமும் வருகிறது. இதைப்பற்றி கூடிய விரைவில் சங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது 72 வயதிலும் ரஜினிக்கு தொடர்ந்து பல டாப் இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

Also read: நடிப்பு இல்லைனாலும் பட வாய்ப்புக்கு மட்டும் குறைச்ச இல்ல.. வாரிசு நடிகை என்பதால் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு

Trending News