வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லோகேஷை பின்னுக்கு தள்ள ஷங்கர் எடுக்கப் போகும் ஆயுதம்.. ரஜினி, கமல் கூட்டணியில் புது முயற்சி

Director Shankar: சினிமாவில் பல வருட காலமாக இயக்குனருக்கான அந்தஸ்தை பெற்று பிரம்மாண்டமாக பெயர் வாங்கியவர் சங்கர். அந்த வகையில் இவருடைய படம் பல முன்னணி நடிகர்களை மிகப் பெரிய உயரத்திற்கு தள்ளி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வந்த கொஞ்ச காலங்களிலேயே யுனிவர்சல் இயக்குனராக அனைவரும் லோகேஷை தூக்கி கொண்டாடி வருகிறார்கள்.

அத்துடன் விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவர்களுடைய மார்க்கெட் ரேட்டை கூட்டி விட்டார். இதனை தொடர்ந்து இவரை தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு ரஜினியே எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் படம் உருவாக்க போவதாக தகவல் வெளியானது.

Also read: லோகேஷ் செதுக்கிய 5 கதாபாத்திரங்கள்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் ரெண்டு கேரக்டர்

இதற்கிடையில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கப் போவதாக பல பேச்சுக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆமாம் கண்டிப்பாக இந்த மாதிரி இரு லெஜெண்டரியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் அது இவரால் மட்டும் தான் முடியும்.

அதனாலேயே அனைவரது  கவனமும் லோகேஷ் மீது திரும்பி விட்டது. இதெல்லாம் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து வந்த சங்கர், எப்படியாவது லோகேஷை பின்னுக்கு தள்ள வேண்டும் என்று மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுக்க போகிறார். அதாவது ரஜினி, கமல் கூட்டணியை சங்கர் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

Also read: ஒரே ஒரு டெக்னாலஜிக்காக பல கோடியை வாரி இறைக்கும் சங்கர்.. அமெரிக்காவில் நடைபெறும் தரமான சம்பவம்

அதனால் இவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் எப்பொழுது சம்மதம் கொடுக்கிறார்களோ, அந்த நிமிஷமே படத்தை ஆரம்பித்து விடலாம் என்று முடிவில் இருக்கிறார். தற்போது ரஜினி, கமல் இருவருமே மாஸாக வெற்றி பெற்று வசூல் அளவிலும் சாதித்து விட்டார்கள். இதனால் இவர்களை பயன்படுத்திக் கொண்டால் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைத்துவிடும் என்ற திட்டத்தில் சங்கர் முடிவெடுத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் இந்த வெற்றி மூலம் அனைவரும் கவனமும் நம் மீது திரும்பி விடும். இதன் மூலம் லோகேஷ் பின்னுக்கு போய்விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார். மேலும் இந்தியன் 2 படம் வெளிவந்தவுடன் ஷங்கரின் அடுத்த கட்ட  முயற்சியை கூடிய விரைவில் ஆரம்பித்து விடுவார்.

Also read: அப்பாவின் டார்ச்சர் தாங்கல.. சிக்காமல் சிட்டாய் பறந்த அதிதி சங்கர்

Trending News