திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எவ்ளோ பெரிய படிப்பு படிச்சும் பிரயோஜனம் இல்ல.. பெத்த மகளை நினைத்து கண்ணீர் விடும் ஷங்கரின் நிலைமை

இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ராமச்சரன் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். இதனிடையே தற்போது ஷங்கர், ரஜினி மற்றும் கமல் இருவரையும் வைத்து படம் பண்ணலாம் என்ற பிளானில் ஒருபக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

அதே போல நடிகர் விஜய்யை வைத்து அரசியல் களத்தில் ஒரு படத்தை இயக்கவும் ஷங்கர் காத்துக்கொண்டு இருக்கிறார். இப்படி 60 வயதாகியும் இயக்குனர் ஷங்கர் தனது பணிக்காக அயராது உழைத்து வரும் நிலையில், பல திறமையாளர்களையும் உருவாக்கி வருகிறார். ஷங்கரின் படங்களில் யார் நடித்தாலும் அன்றிலிருந்து இப்போது வரை அவர்களது வாய்ப்பு, வாழ்வாதாரம் உயரும். ஆனால் இவரது மகளால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருவது தான் கொடுமை.

Also Read: கை மீறி போனதால் மகளுக்கு கடிவாளம் போட்ட ஷங்கர்.. விரக்தியில் எடுத்த அதிரடி முடிவு

ஷங்கரின் இளைய மகளான நடிகை அதிதி ஷங்கர், கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டாலும், இவரால் பலரும் தங்களது வாய்ப்புகளை பறிக்கொடுத்து வருகின்றனர்.

முதலாவதாக விருமன் படத்தில் பாடகி ராஜலக்ஷ்மி மதுர வீர பாடலை பாடிய நிலையில், அதிதி ஷங்கர் அவரது வாய்ப்பை தட்டிப் பறித்து அந்த பாடலை அவரது குரலில் பாடி வெளியானது. இதுகுறித்த சர்ச்சை முடிவதற்குள், அண்மையில் வெளியான மாவீரன் படத்தில் இடம்பெற்ற வண்ணாரப்பேட்டை பாடலையும் அதிதி ஷங்கர் குரலில் வெளியான நிலையில், அந்த பாடலை வேறொரு பாடகி பாடிய பின்னரே இவர் அந்த வாய்ப்பை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

Also Read: ஏழைகள் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்ளும் அதிதி சங்கர்.. வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது ஒரு பொழப்பா?

மேலும் தான் நடிக்கும் படங்களில் கட்டாயம் பாடல்களை பாடுவேன் என அதிதி ஷங்கர் கண்டிஷன் போட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. இப்படி, தான் ஒரு வாரிசு நடிகை என்பதால் அதிதி ஷங்கர் ஒவ்வொரு வாய்ப்பையும் தனக்கேற்றார் போல் பயன்படுத்தி வருகிறார். இதனிடையே தனது அப்பாவின் கனவை பாழாக்கி தான் இப்படி ஒரு வேலையை அதிதி ஷங்கர் செய்து வருவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஷங்கர், நடிகை அதிதி ஷங்கரை மருத்துவத்திற்கு படிக்க வைத்து டாக்டராக்கி அழகு பார்த்தார். ஆனால் அதிதி ஷங்கர் நடிக்க வந்துவிட்டு மருத்துவ சேவை செய்வதையே மறந்துவிட்டார். டாக்டராக வேண்டும் என எத்தனையோ பேர் கனவு காண்கிறார்கள். அதற்காக உயிரை கூட மாய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் மருத்துவத்திற்கு படித்தும் கூட அதிதி ஷங்கர் மருத்துவ சேவை செய்யாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது ஷங்கருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிதி ஷங்கருக்கு கொடுத்த பெரிய டிமிக்கி.. அல்வாவோட மகிமை தெரியாமல் அறியா பிள்ளை எல்லாத்தையும் நம்புது

Trending News