செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சங்கர் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா? இப்படியெல்லாம் பண்ணா எந்த தயாரிப்பாளர் தான் சும்மா இருப்பாங்க!

சங்கர் அமைதியாக இருப்பதால் தமிழ் சினிமாவில் அவரை நல்லவர் போல் காட்டி விட்டார்கள் போல. ஆனால் அவரைப் பற்றிய வரலாறுகளை தோண்ட ஆரம்பித்த போதுதான் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்துள்ளது. பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர் தன்னுடைய படங்களில் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவை வைப்பதும், படம் வெற்றி பெறவில்லை என்றால் ஷங்கரை தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் ஷங்கரால் அழிந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் சங்கரால் என்னென்ன அவஸ்தைகள் பட்டுள்ளார் என்பதை சமீபத்திய வீடியோவில் வலைப்பேச்சு நண்பர்கள் ஓப்பனாக தெரிவித்துள்ளனர். ஷங்கர் மற்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஐ. விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் வியாபாரமே வெறும் 90 கோடிக்கு தான் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் படம் வெளியாகி பல பஞ்சாயத்துகளை சந்தித்தது. எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை. ஐ படத்திற்கு பிறகு ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் காணாமல் போய் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு காரணம் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் படப்பிடிப்புக்கு முன்னால் அட்வான்ஸ் இல்லாமல் அதிகமாக கொஞ்சம் தொகை சங்கர் கேட்டாராம். ஆனால் ரவிச்சந்திரன் படம் முடிவதற்கு நாட்கள் இருக்கிறது எனவும் அதன் காரணமாக அவ்வப்போது கொடுத்துக் கொள்ளலாம் என நட்பு ரீதியாக கொடுக்காமல் விட்டு விட்டாராம்.

ஆனால் சங்கர் அதை மனதில் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஐ படத்தை கைவிட்டுவிட்டு அவருடைய அடுத்த படமான 2.o படத்துக்கான வேலைகளுக்கு சென்று விட்டாராம். இதனால் ஐ படத்திற்காக பிரமாண்ட அரங்கு ஒன்று அமைத்து வாடகை மட்டுமே மாதத்திற்கு 6 லட்சம் கட்டி வந்தாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.

சங்கர் தொடர்ந்து தயாரிப்பாளர்களை குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார். ஆனால் தான் செய்த தவறுகள் என்ன என்பதை மட்டும் நினைக்க ஏனோ மறுத்து வருகிறார். தமிழ் தயாரிப்பாளர்களை தவிக்கவிட்ட ஷங்கர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி தயாரிப்பாளர்ளிடம் பொட்டி பாம்பாய் அடங்கி விட்டார் என்பதுதான் வேதனை.

i-shankar-cinemapettai
i-shankar-cinemapettai

Trending News