வைகைப்புயல் வடிவேலு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு மகா கலைஞன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு வடிவேலுவுக்கான பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போனது ஒரு கட்டத்தில் இல்லாமலே போனது என்றாலும் ஆச்சர்யத்திற்கில்லை.
வடிவேலு நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. வெற்றிகரமாக ஓடிய இந்த படம் அப்போதைய வரவுக்கு நல்ல வசூலையை பெற்றது. அதற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த படங்கள் அத்தனை வரவேற்பை பெறவில்லை.
பிறகு இயக்குனர் ஷங்கர் சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகமாக 24ஆம் புலிகேசி என தலைப்பிடப்பட்ட இந்த படத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன சரியான காஸ்டியூம் இல்லை சரியான மேக் அப் இல்லை என குறை கூறிய வடிவேலு ஒரு கட்டத்தில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என உயர்த்தி கேட்கவே படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் ஷங்கருக்கு 7 கோடிகள் வரை விரயமாகவே வழக்கமான படத்தில் வரும் பஞ்சாயத்து சீனை முடித்து வைத்தது தயாரிப்பாளர் சங்கம். வழக்கம் போல உதறித்தள்ளிய வடிவேலுவுக்கு வந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு படவாய்ப்புகளும் பறிபோனது.
அதே போல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசனை வைத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் இந்தியன்-2 இந்த படப்பதிவு தளத்தில் ஏற்பட்ட விபத்து மறறும் கொரனா ஊரடங்கு காரணமாக படப்பதிவு கடத்தப்பட கடுப்பான லைகா ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது.
வழக்கின் சாராம்சமாக இந்தியன் 2 படத்திற்கு பிறகு தான் அடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளை ஷங்கர் வெளியிட வேண்டும் என கிடுக்குப்பிடி போட்டது லைகா. இப்போது நடிகர் வடிவேலுவை வைத்து நாய் சேகர் என்கிற படத்தை தயாரிக்கிறது லைகா.
எதிரியின் எதிரி நண்பன் என்பது போல ஷங்கரின் எதிரியாக வடிவேலுவை பிடித்திருக்கிறது லைகா.