திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

5 வருடத்திற்கு பிறகு களம் இறங்கும் கேப்டனின் வாரிசு.. ஒரே போஸ்டரில் மிரட்டி விட்ட சண்முக பாண்டியன்

Actor Shanmuga Pandian: சிபாரிசில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இன்றும் முட்டி மோதிக்கொண்டு, தன் நடிப்பினை வெளிக்காட்ட முயற்சித்து வரும் நடிகர் தான் சண்முக பாண்டியன். இந்நிலையில் தற்பொழுது தான் எடுத்து வைக்கும் அடுத்த முயற்சிக்கு அடித்தளம் போட்டு வருகிறார்.

விஜயகாந்தின் வாரிசாய் நடிப்பிலும், அரசியலிலும் தன் ஆர்வத்தை காட்டி வருகிறார் சண்முக பாண்டியன். அவ்வாறு 2018ல் ஆக்சன் படமாய் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் மதுரவீரன். இப்படத்தில் சமுத்திரகனி, மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

Also Read: ஆதி புருஷால் வந்த சுதாரிப்பு.. சிறுத்தை சிவாவுக்கு வார்னிங் கொடுத்த சூர்யா

மதுரை ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பெருதளவு கை கொடுக்காமல் சராசரியான விமர்சனங்களை பெற்று தந்தது. அதன் பின் தந்தையின் உடல்நிலை குறித்து, அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த இவர், தன் நடிக்கும் ஆர்வத்தினை கொண்டு வொர்க் அவுட் செய்து வந்தார்.

அதை தொடர்ந்து தற்பொழுது வேறு பரிமாணத்தில், தன் சொந்த புரொடக்ஷனில் படம் மேற்கொள்ளப் போகிறார். அப்படம் முழுக்க முழுக்க காட்டு யானையை கொண்டு எடுக்கப்பட போகிறதாம். அதற்கான அடித்தளமாய் இப்படத்தின் பூஜையை மேற்கொண்டார் சண்முக பாண்டியன்.

Also Read: பணத் திமிரில் கணவர்களை விவாகரத்து செய்த 6 பிரபலங்கள்.. காதல் கணவரை தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

மேலும் இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இருக்கிறார்கள். ஏற்கனவே விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த கும்கி படம் மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. அதேபோல் தற்பொழுது யானை பலத்தோடு தன் அடுத்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார் சண்முக பாண்டியன்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளா, ஒரிசா, தாய்லாந்து போன்ற காடுகளில் நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது. இப்படம் யானை சார்ந்து இருப்பதால் அதற்கான சூழலில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் இயக்குனர் அன்பு. சுமார் 5 வருடத்திற்கு பிறகு தன் 2வது படத்தை ஏற்கும் சண்முக பாண்டியனின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் ஆவது இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: மற்றவர்கள் கற்றுப்பார்கள் என்று கமல் மறைத்த 5 விஷயங்கள்.. இன்று வரை பேசப்படும் அபூர்வ சகோதரர்கள் அப்பு

Trending News