விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பல நடிகர்கள் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த வில்லை. விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு மட்டுமே மாஸ்டர் படத்தில் பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்தது.
ஓபன் ஆக சொல்ல வேண்டுமென்றால் விஜய்யை விட விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்துவிட்டார். அநியாயத்திற்கு வில்லனாக நடித்து அனைத்து ரசிகர்களின் கைத்தட்டல்களையும் பெற்றுவிட்டார் விஜய் சேதுபதி. அப்படி பெரிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிகூட மாஸ்டர் படத்தை பற்றி பெரிய அளவு பேட்டி கொடுக்கவில்லை.
ஆனால் மாஸ்டர் படத்தில் நடித்த நண்டு சிண்டு எல்லாம், என்னமோ மாஸ்டர் படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் இவர்கள் தான் என்பதை போல அனைத்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். ஆனால் படத்தில் அவர்களுக்கு ஊறுகாயை அளவுக்கு கூட காட்சி இல்லை என்பதுதான் வேதனை.
அதிலும் குறிப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய் டிவி தீனா, சாந்தனு, யூடியூப் பவி டீச்சர், 96 பட புகழ் கௌரி ஆகியோர்களுக்கு மாஸ்டர் படத்தில் பேசப்படும் அளவுக்கு கதாபாத்திரம் இல்லை. இதனை ரசிகர் ஒருவர் நேரடியாக நடிகர் சாந்தனுவை சமூக வளைதளத்தில் கிண்டலடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய் கையில் ஒரு பூனை அளவிற்குக்கூட சாந்தனும் படத்தில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதற்கு சாந்தனு, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக ஒரு காட்சியோ, ஒரு படமோ. அதுவே ஒரு சாதனைதான் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான சாந்தனும் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் மக்கள் இன்னமும் அவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ளவில்லை.
மாஸ்டராவது அதை மாற்றுமா என நினைக்கையில் தற்போது அதுவும் நடக்காமல் போய்விட்டது. எதை வேண்டுமானாலும் மன்னித்து விடலாம், ஆனால் இவர்கள்தான் மாஸ்டர் படத்தின் ஹீரோ போல அனைத்து யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்ததை தான் மன்னிக்க முடியாது என்கிறார்கள் சில ரசிகர்கள்.
