ஊடகவியலாளர் ஜீவா சகாப்தம் நடிகர் சந்தானத்தை கடுமையாக சாடியுள்ளார். செய்தி சேனலில் பணியாற்றியவர் மிகவும் பிரபலமான தேர்தல் தர்பார், கதையல்ல வரலாறு போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
அண்மையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளியான “டிக்கிலோனா” திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மிகவும் தரமற்ற இருப்பதாக கூறியுள்ளார். கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்கள் இழிவு படுத்தி பேசினாலும் சமூக கருத்துக்களை மக்களுக்கு கூறுவர்.
விவேக் சமூக செய்தி, சாதி மறுப்பு, முற்போக்கு சிந்தனைகளை தனது திரைப்படம் மூலம் கூறுவார். படைப்புகள் என்றும் முற்போக்கு சிந்தனையுடன் தான் இருக்க வேண்டும் பிற்போக்கு சிந்தனையுடன் சந்தானத்தின் திரைப்படம் உள்ளது. மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் குண்டானவர்கள், ராயபுரம், காசிமேடு மக்கள் என அனைவரும் கேலி செய்தும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.
விஜய் சிவகாசி படத்தை பேசிய வசனத்திற்கும் பிகில் படத்தில் பேசியதற்கும் வித்தியாசம் உண்டு. அதேபோல அஜித் வரலாறு படத்தில் பேசியதற்கும், நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கும் நிறைய மாற்றங்களை பார்க்கலாம். விஜய் டிவி லொள்ளுசபா தொடங்கியது முதல் அடித்தட்டு மக்களை இழிவுபடுத்தும் வசனங்களை இன்று வரை சந்தானம் மாற்றிக்கொள்ளவில்லை.
லெனினின் பிரபல வசனம் “கேமரா என்பது சாதாரண விஷயம் அல்ல மிகப்பெரிய கருவி” என்று கூறியிருப்பார். திரைப்படம் என்றுமே நல்ல கருத்துகளை கூற வேண்டும் அது நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஜீவாசகாப்தம், சந்தானம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.