சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சாந்தினி தேவா. அந்தப் படத்திலேயே இவரை பலருக்கு பிடிக்காமல் போகும்படி தான் இவரது கதாபாத்திரம் அமைந்தது.
நடிகை சாந்தினி தேவா என்பவருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்பவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக ரகசிய உறவு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் பத்திரிகையாளர்கள் முன் முறையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்திலும் வழக்கு பதிவு செய்தார். இதை விசாரித்த காவல்துறையினர் தற்போது விரைவில் மணிகண்டனை கைது செய்யும் நோக்கத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்களாம்.
மேலும் சாந்தினி தேவா கருக்கலைப்பு செய்த கோபாலபுரம் தனியார் மருத்துவமனைக்கு வலைவீசி இதெல்லாம் உண்மையா? என தெரிந்து கொண்டு இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போதே அந்த நடிகைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும்போது நான் ஏன் இதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்பதுபோல கூறியிருந்தார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.
ஆனால் கடந்த சில நாட்களாக அவர் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. ஆளும் கட்சியாக இருந்தால்கூட ஏதாவது பண்ணி தப்பித்திருக்கலாம், ஆனால் தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் சிக்கினால் சின்னாபின்னமாக்கி விடுவார்கள் என ஓடி ஒளிந்து வருகிறாராம்.