தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் பீஸ்ட், காத்துவாக்குல 2 காதல், டான் போன்ற படங்களின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையையும் உதயநிதி தான் பெற்றிருந்தார். விக்ரம் படம் வெளியாகி சில நாட்களிலேயே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.
இதை கொண்டாடும் விதமாக நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கமலஹாசன், உதயநிதி, லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி, டான் படத்தின் வெற்றி விழாவில் பேசியது போல இப்படத்திலும் உண்மையே சொல்ல வேண்டும்.
அதாவது விக்ரம் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை தமிழ்நாட்டு ஷேர் மட்டும் 75 கோடியை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இந்த அளவுக்கு வசூல் பண்ணியது இல்லை.
மேலும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹட் கொடுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இன்னும் ஐந்து, ஆறு வாரங்களுக்கு விக்ரம் படத்தின் டிக்கெட் டிமாண்ட் உள்ளதாக என உதயநிதி கூறினார்.
தற்போது எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்த்த விக்ரம் படம் தற்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் கோடிகளைக் குவிக்க காத்திருக்கிறது. தொடர்ந்து உதயநிதி வெளியிடும் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்வதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.