வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டா தல சுத்துது

பாலுவுட் சினிமா ஸ்டார்களில் ஒருவர் ஷாருக்கான். இவர் கிங் கான் என்று அழைக்கப்படுகிறார். வறண்டு கிடந்த பாலவனத்தில் பசுமை வனம் பார்த்த மாதிரி, சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் எந்தப் படங்களும் ஓடாமல் நெபோசிசத்தாலும், வேறு சில காரணங்களாலும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்திப் படங்களை பாய்காட் செய்தனர்.

இந்த நிலையில், ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியான படம் பதான். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் பாலிவுட் மீண்டது என சினிமா விமர்சகர்கள் கூறினர்.

ஆனால், ஷாருக்கானுக்கத்தான் அப்படம் ஓடியதோ என்று கூறிவது மாதிரி வெறு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ஓடவில்லை. இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான படம் ஜவான். இப்படமும் பாக்ஸ் ஆபிஸீல் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து, சுஜோய் கோஷ் இயக்கத்தில் ஷாருக்கான் கிங் படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

அதேபோல், ஷாருக்கானின் மெகா ஹிட் மூவியான பதான் படத்தின் 2 வது பாகத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க, தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷாருக்கான். சினிமாவில் மட்டுமின்றில், ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். விளம்பரங்களில் நடிப்பதுடன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார்.

ஷாருக்கானின் முதல் சம்பளம் 50 ரூ. டூ 250 கோடி

இந்த நிலையில் ஷாருக்கானின் சம்பளம் மற்றும் சொத்துக்கள் விவரம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்து வரும் ஷாருக்கானின் முதல் சம்பளம் 50 ரூபாய். பங்கஜ் உதாஸின் இசை நிகழ்ச்சியில் வேலை செய்ததற்கான அந்த ஊதியம் பெற்றதாக கூறினார்.

தற்போது 59 வயதாகும் ஷாருக்கான் சுமார் 7300 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு உரிமையாளர் என கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிக்க 150 முதல் 250 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. விளம்பர படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். பேச்செக் டாட் தகவலிலி ஆண்டுக்கு ரூ.800 கோடியும், மாதத்திற்கு 66 கோடியும், வாரத்துக்கு 15 கோடியும், ஒரு நாளுக்கு 3 கோடி ரூபாயும் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு மட்டும் இவ்வளோ சம்பளமா?

அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு மட்டும் 21 ஆயிரம் சம்பாதிக்கிறார் எனவும், ஒரு மாதம் தனியார் துறையில் விடிய விடிய வேலை பார்த்து சம்பாதிக்கும் ஊழியரின் ஊதியத்தை இவர் ஒரு மணி நேரத்தில் சம்பாதித்து விடுகிறார் என கூறுகின்றனர். ஆனால், இப்படி பேர், புகழ், பல கோடி வருமானம் ஈட்ட, அவர் 30 ஆண்டுகளாக தொடர்ந்து உழைக்கிறார் எனவும், ஆரம்பத்தில் அவரும் சாதாரண ஊழியராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News