வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நான் அதுக்கு ரொம்ப addict ஆகிட்டேன்.. ஷாருக்கான் சார், இதெல்லாமா வெளில சொல்றது

பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். நவம்பர் 2 ஆம் தேதி தனது 52 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தனது ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் ஷாருக்கான்.

ஷாருக்கான் தற்போது தனது அடுத்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘கிங்’ படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை சுஜோய் கோஷ் இயக்க உள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தில் ஷாருக் டான் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், லேட்டஸ்ட் தகவல்களின்படி, அவர் ஒரு கொலையாளியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பதை அதிகரித்துள்ளது.

மேலும் முக்கியமாக இந்த படத்திற்க்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் தான் சமீபத்தில் ஒரு fans meet நிகழ்ச்சியில் ஒரு குட் நியூஸை ஷேர் செய்துள்ளார் ஷாருக்கான். அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாளுக்கு 100 சிகரெட்

fans meet நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு நல்ல விஷயம் இருக்கிறது, நான் இனி புகைபிடிக்க மாட்டேன். புகைபிடிப்பதைக் கைவிட்ட பிறகு மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் அதுவும் சரியாகிவிடும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் அவர் சிகரெட் பற்றி பேசிய ஒரு விஷயமும் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, “‘நான் ஒரு நாளைக்குக் குறைந்தது 100 சிகரெட்டுகள் பிடிப்பேன். சில நேரங்களில் சாப்பிடுவதைக் கூட மறந்துவிடும் அளவுக்கு புகைப்பிடிப்பேன். நான் தண்ணீர் குடிக்க மாட்டேன். என்னிடம் எப்போதும் சுமார் 30 கப் பிளாக் காஃபி இருக்கும். அது குடித்தும், எனக்கு சிக்ஸ் பேக்ஸ் இருக்கிறது” என்று பேசி இருந்தார்.

இதை கேட்ட அப்போதைய சமூக ஆர்வலர்கள், ‘இதெல்லாம் பெருமையா?’, ‘தவறான முன்னுதாரணமாக திகழ்கிறார்’ என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார் ஷாருக்கான்.

ஒரு பெரிய ஸ்டார் ஆக இருந்தும், தன்னிடம் உள்ள கேட்டபழக்கத்தை வெளிப்படையாக பேசிய ஷாருக்கானுக்கு ரசிகர்கள் தற்போது தங்கள் பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Trending News