வயிற்றில் உள்ள கருவையை கலைத்தார்.. நெப்போலியனை பார்த்து தெரிந்த ஓடிய பெண்

80, 90களில் மிகவும் பிசியான நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களில் நெப்போலியன் பின்னி பெடலெடுப்பார். அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களிலும் நெப்போலியன் நடித்துள்ளார்.

சினிமாவைப் போல அரசியலிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். இந்நிலையில் தற்போது படங்களில் அதிக அளவு நடிப்பதை குறைத்துக் கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விவசாயம் செய்து வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயதில் இருந்தே விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

Also Read : கேலி, கிண்டலுக்கு உள்ளான நெப்போலியன்.. வெறிகொண்டு சாதித்து காட்டிய சம்பவம்

இதனால் அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நெப்போலியன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது தனது பெண்பார்க்கும் படலத்தை பற்றி கூறியிருந்தார். அதாவது என் மனைவி கல்லூரி படிக்கும் போது என் ஜாதகத்தையும் அவர் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்தனர்.

அப்போது எங்களுக்குள் ஒன்பது பொருத்தம் இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் பெண் பார்க்கச் செல்லும்போது என்னுடைய மனைவி யார் மாப்பிள்ளை என்று கேட்டார். அவர் சினிமாவில் நடிகராகவுள்ளார், அவரது பெயர் நெப்போலியன் என்று எனது உறவினர்கள் கூறியுள்ளார்கள்.

Also Read : ஹாலிவுட்டையும் ஒரு கை பார்த்த 6 தமிழ் நடிகர்கள்.. இளசுகளை வாயிலும், வயிற்றிலும் அடிக்க செய்த நெப்போலியன்

அதைக் கேட்ட என் மனைவி அந்த வில்லன் நடிகராய் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றாராம். அதாவது எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரராக இருந்தார். அப்படிப்பட்ட அவருடன் நான் எப்படி குடும்பம் நடத்துவது என அவர் தெறித்து ஓடி உள்ளார்.

அந்தப் பெண்ணுடைய அப்பா, சினிமாவில் தான் அவர் அப்படி நடித்துள்ளார், நிஜத்தில் ரொம்ப நல்லவர், விசாரிக்காமல் நான் எப்படி உன்னை கொடுப்பேனா என சமாதானம் படுத்தியுள்ளார். அதன் பின்பு தான் தன்னை திருமணம் செய்து கொள்ள எனது மனைவி ஒற்றுக்கொண்டதாக  பேட்டி ஒன்றில் நெப்போலியன் கூறியிருந்தார்.

Also Read : விஜய் வேணும்னே அப்படி செய்தது எனக்கு புடிக்கல.. நேரடியாகவே சொன்ன நெப்போலியன்