புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அவ குளிக்க மாட்டா, நான் வாட்டர் பெட்.. உச்சகட்ட காதல் போதையில் மகாலட்சுமி ஜோடி

தற்போது சோசியல் மீடியாவில் எந்த சேனலை பார்த்தாலும் மகாலட்சுமி, ரவீந்திரன் ஜோடியின் பேட்டிகள் தான் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தற்போது கல்யாண பூரிப்பில் இருக்கின்றனர்.

சர்ச்சைக்கு பெயர் போன இந்த ஜோடியின் திருமண செய்தி இந்த அளவுக்கு தலைப்புச் செய்தியாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அவ்வளவு ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட இது திகைப்பாகத்தான் இருக்கிறது. அதை அவர்கள் ஒவ்வொரு பேட்டியிலும் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

Also read:நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை.. மஞ்சள் தாலியுடன் ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி

தற்போது தமிழ் தெலுங்கு சேனல்களுக்கு மும்முரமாக பேட்டி கொடுத்து வரும் அவர்கள் ஓவராக சீன் போடுவதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் உச்சகட்ட காதல் போதையில் அவர்கள் உளறி வருவது தற்போது கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

அதாவது காதல் மயக்கத்தில் இருக்கும் அவர்கள் இருவரும் தங்கள் பர்சனல் விஷயங்களை கூட கூச்சப்படாமல் கூறி வருகின்றனர். அதிலும் முக்கியமாக ரவீந்திரன், மகாலட்சுமியின் டூத் பிரஷில் தான் பல்லு விளக்குகிறாராம். மேலும் ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்கும் ரவீந்திரன் சூட்டிங் இல்லாத நேரத்தில் மகாலட்சுமி குளிக்கவே மாட்டார் என்ற ரகசியத்தையும் கூறியுள்ளார்.

Also read:எனக்கு மகாலட்சுமிக்கும் 21 வயசு வித்தியாசமா.? கல்யாணத்திற்கு பின் ரவீந்தர் அளித்த பேட்டி

அதுமட்டுமல்லாமல் தங்கள் திருமணத்தை பார்த்து சில ரசிகர்கள் தரம் தாழ்ந்த கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதற்கு பதிலடி தரும் விதமாக அவர் நான் மகாலட்சுமிக்கு ஒரு வாட்டர் பெட் என்று கூறி இருக்கிறார். மேலும் மகாலட்சுமி பொது இடம் என்று கூட பார்க்காமல் அவர் என்னிடம் ரொமான்டிக்காக இருக்க மாட்டார், முத்தம் கூட கொடுக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் முதல் கல்யாண ரேஞ்சுக்கு உங்க அலப்பறை தாங்க முடியவில்லை என்று வெளிப்படையாகவே கதறி வருகின்றனர். தற்போது பயங்கர பிசியாக இருக்கும் இந்த ஜோடி ஹனிமூனுக்காக சுவிட்சர்லாந்து செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read:தயாரிப்பாளரை 2ம் திருமணம் செய்த சன் டிவி மகாலட்சுமி.. திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Trending News