சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தீனா பட அஜித்தின் மச்சினிச்சி ஞாபகம் இருக்கிறதா.? கணவனுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்கள் நடித்துள்ளனர் ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே தற்போதுவரை ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளனர் அப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் ஷீலா கவுர்.

இவர் தமிழ் சினிமாவில் பூவே உனக்காக, நந்தா, கோல்மால் மற்றும் மாயா ஆகிய படங்களில்குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் இளவட்டம், வீராசாமி, கண்ணா மற்றும் வேதா ஆகிய படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்த இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தீனா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்த்தனர்.

sheela kaur
sheela kaur

எதிர்பார்த்தபடியே தமிழ் மற்றும் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருடைய திருமணம் செய்த புகைப்படங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பார் எனவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Trending News