தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷெரீன். இப்படம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இதனை தொடர்ந்து இவர் நடித்த விசில் படமும் ஹிட் அடித்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் அதன் பிறகு இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஷெரீன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலம் தான் இழந்த மார்க்கெட்டை சரி செய்ய முடியும் என அவர் எதிர்பார்த்தார்.
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பின்னர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஷெரீனுக்கு மீண்டும் ரசிகர்கள் உருவாக தொடங்கினர். இருப்பினும் இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில் ஷெரீன் தனக்கு கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சந்தித்தவர்களுக்கு ஒரு அறிவிப்பு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷெரின் பதிவிட்டுள்ள வீடியோ-வில, “துரதிர்ஷ்டவசமாக எனக்கு கோவிட் பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் எனக்கு அப்படி வருவதற்கு வாய்ப்பே இல்லை. எங்க இருந்து வந்ததுனே தெரியல.. என் மூலம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் என்னுடன் சிலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். சிலர் பாண்டிச்சேரியில் சந்தித்தீர்கள். தயவு செய்து தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள், பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார். இதனால் சமீபத்தில் ஷெரினை சந்தித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.