ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தன்னை விட 21 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்.. வயசு முக்கியமில்லை, வாய்ப்பு தான் முக்கியம்!

சமீபகாலமாக இளம் நடிகைகள் பலரும் தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தால் போதும் என தங்களை விட அதிக வயது மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அந்த வகையில் தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்து விடாதா என காத்துக் கொண்டிருக்கும் இளம் நடிகை தான் ஷில்பா மஞ்சுநாத். 29 வயதான இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் அதற்கு முன்பே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இளம் ரசிகர்களை மயக்கும் அளவுக்கு தோற்றம் இருந்தாலும் படவாய்ப்புகள் பெரிய அளவு கிடைக்கவில்லை.

இதனால் தற்போதைக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என மூத்த நடிகர் முதல் அறிமுக நடிகர்கள் வரை யார் படவாய்ப்பு கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். அந்த வகையில் 50 வயது நடிகரான நட்ராஜுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர்களால் நட்டி எனச் செல்லமாக அழைக்கப்படும் நட்ராஜ் சமீபத்தில் கர்ணன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பாராட்டு பெற்றார்.

இந்நிலையில் அடுத்ததாக நட்ராஜ் நடிக்கும் புதிய சைக்கோ த்ரில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்க உள்ளார்.

natraj-shilpa-manjunath-cinemapettai
natraj-shilpa-manjunath-cinemapettai

Trending News