சமீபகாலமாக இணைத்தளங்களில் அதிகமாக ஆபாச போட்டோக்கள் வீடியோக்கள் பரவிவருகின்றன. திரையரங்குகளில் உள்ளது போல சென்சார் இல்லாததே காரணம் என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதே போன்ற ஆபாச வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஜூலை 16ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம் வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஆபாச படங்களை எடுத்துள்ளார்.
அந்தப் படங்களை ஹாட் ஷார்ட்ஸ் செயலி மூலம் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பின் அந்த செயலியை முடக்கினர்.
ராஜ்குந்த்ராவையும் கைது செய்தனர். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் வட இந்தியா மீடியாவிற்கு அளித்த பேட்டியில் பல குண்டுகளை ராஜ்குந்த்ரா மீது வீசியுள்ளார். இதைக்கேட்ட இணையதளத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ஷெர்லின் சோப்ரா தான் அந்த குண்டை வீசியவர். ஆபாச படங்களில் நடிக்கும் இவர் தன்னை இவ்வாறு ஆபாச திரைப்படங்களில் நடிப்பதற்கு வழிகாட்டியது என்னுடைய குருநாதர் ராஜ்குந்த்ரா தான் என்று கூறியுள்ளார்.

அரை நி**வாணமாக நடிப்பது மற்றும் நி**வாணமாக நடிப்பது தவறில்லை என்றும் மேலும் பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் இவ்வாறு நடித்துள்ளனர் என்றும் தன்னை தவறாக வழிநடத்தும் ராஜ்குந்த்ரா தான் என்று பலவாறு குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார்.
தன் கணவர் ஆபாச படம் எடுக்கவில்லை என்றும் தனது கணவருக்கு ஆதரவாகப் பேசும் ஷில்பா ஷெட்டிக்கு ஷெர்லின் அளித்துள்ள பேட்டி மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.