வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பேயாக மாறிய விஜய் பட நடிகை… அலறி ஓடிய பொதுமக்கள்.

ரியாலிட்டி ஷோவில் புரமோஷனுக்காக அச்சு அசலாக பேய் போல மேக்கப் செய்து பொது மக்களை பயமுறுத்தி வரும் பிரபல நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி, தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோவின் நடுவராக உள்ளார். இந்நிலையில், ரியாலிட்டி ஷோவை விளம்பரப்படுத்தும் புதிய முயற்சியாக தயாரிப்பு நிறுவனம் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்று வரும் ஷில்பா ஷெட்டிக்கு பேய் போல மேக் அப் செய்து பொது இடத்தில் நிற்க வைத்து உள்ளனர்.

அவரும் பொதுமக்கள் வரும் போது அவர்களை பயமுறுத்தி நிகழ்ச்சியை பிரபலப்படுத்தி உள்ளார். இதில் பீதியடைந்த பலர் நடிகை ஷில்பா ஷெட்டியை திட்டி உள்ளனர். ஆனால், பேய் போல் வேடமிட்டு உள்ளது ஷில்பா தான் என தெரிந்ததும் அவரிடம் அசடு வழிந்து பேசியுள்ளனர்.

shilpa shetty
shilpa shetty

தற்போது ஷில்பா சூப்பர் டான்சர் பார்ட் 4 நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். இந்த ரியாலிட்டி ஷோவின் ப்ரோமோஷனுக்காகவே பேய் வேடமிட்டுள்ளார். பேய் போன்று உடை அணிந்து ரசிகர்களை பயமுறுத்திய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending News