மாஸ் நடிகர்கள், கிளாஸ் நடிகர்கள் என தங்களைத் தாங்களே பலரும் வரையறை செய்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு காமெடி மட்டும் தான் வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு படங்களை கொடுத்து வருகிறார் மிர்ச்சி சிவா.
ரேடியோவில் பணியாற்றிய மிர்ச்சி சிவா சென்னை 600028 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு இவரது ஒவ்வொரு படங்களுமே நக்கலும் நையாண்டியும் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது.
சில படங்கள் மட்டுமே இவரது நடிப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளனர். மற்றபடி மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம்தான் சுமோ(sumo).
ஜப்பானில் உள்ள சண்டை கலைஞரை மையமாக வைத்து காமெடியாக உருவாகியிருந்த சுமோ திரைப்படம் கடந்த வருடமே தியேட்டரில் வெளியாக இருந்த நிலையில் கொரானா சூழ்நிலையால் தள்ளிச் சென்றது. தற்போது மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கு நாளாகும் என்பதால் ஓடிடி-யில் வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
சிவாவின் இதுவரை வந்த படங்களுக்கு இல்லாத வரவேற்பு சுமோ படத்தின் டிரைலருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை சுமோ படத்தின் டிரைலர் 8 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது. மேலும் இந்தப் படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகும் எனவும் செய்திகள் கிடைத்துள்ளன.
கண்டிப்பாக சுமோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் சிவாவின் சினிமா வளர்ச்சிக்கு அந்த படம் மிகவும் உதவியாய் இருக்கும் எனவும், ஆனால் தற்போது வேறு வழி இல்லாததால் நேரடியாக ஓடிடிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.
![sumo-on-amazon](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/sumo-on-amazon.jpg)