செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

என்னோட கதையை கேட்டு சிவாஜி தேம்பி தேம்பி அழுதாரு.. சீமானின் புதிய உருட்டா இது?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்கள் என்றாலே அதனின் எதிர்பார்ப்பு அதிகம். அதன் காரணமாகவே இவரை வைத்து படம் எடுக்க பலரும் முயற்சி செய்தனர். அவ்வாறு சீமானின் கதையை கேட்டு சிவாஜி அழுததாக இவர் கூறி வரும் அலப்பறை புதியதொரு உருட்டாக பரவி வருகிறது.

அந்த வகையில் சீமான் கதை எழுதி வெளிவந்த படம் தான் பசும்பொன். ஒரு காலகட்டத்தில் சினிமாவில் தன் கதைக்கேற்ற சான்ஸ் கிடைக்காதா என்று பல இயக்குனர்களுடன் சுற்றி திரிந்தவர் தான் சீமான். அச்சமயம் பாரதிராஜா இயக்கத்தில் பிரபுவின் நடிப்பில் வெளிவராத திருவிழா படத்தை தொடர்ந்து அவர் தன் கதையை பாரதிராஜாவிடம் கூறி வந்திருக்கிறார்.

Also Read: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை நடிகர் கமல் சந்தித்தார்.!

மேலும் இக்கதைக்கு சிவாஜி நடித்தார் என்றால் நல்லா இருக்கும் என்ற ஒப்புதலையும் முன் வைத்திருக்கிறார். இது தொடர்ந்து பாரதிராஜா சிவாஜி இடம் பேச பயந்த காரணத்தால் சீமானே சிவாஜி வீட்டிற்கு சென்று கதை சொல்லி இருக்கிறார். கிராமத்து சாயலில் இருக்கும் கதை என்பதால் அதை கேட்க ஒப்புக் கொண்டார் சிவாஜி.

இக்கதையை கேட்ட நடிகர் திலகம் ஒரு நேரத்திற்கு பிறகு கண்கலங்கி விட்டதாக கூறி பெருமைப்பட்டு வருகிறார் சீமான். மேலும் இவரின் கதையை கொண்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சிவாஜி. அதன்பின் தான் இப்படத்தை இயக்கி உள்ளார் பாரதிராஜா.

Also Read: நடிகர் திலகம் படத்தில் இருக்கும் மிகப்பெரிய தவறு.. வரலாறு தெரியாமல் எடுக்கப்பட்ட ஹிட் படம்

1995ல் சிவாஜி, பிரபு, சிவகுமார், ராதிகா, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் தான் பசும்பொன். குடும்ப கதையை மையமாகக் கொண்டு அமைந்திருக்கும் இப்படத்தில் ஏற்படும் திருப்பங்களை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார். மேலும் இப்படம் பிரபுவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

மேலும் இப்படத்தில் கூடுதல் சிறப்பாக அப்பா, மகன் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். அதை தொடர்ந்து தலைக்கூத்தலின் முக்கியத்துவத்தை இப்படத்தில் உணர்த்தப்பட்டிருக்கும். இத்தகைய சிறப்புகளோடு நடிகர் திலகம் ஆன சிவாஜியையே அழ வைத்ததாக பெருமை பேசி வருகிறார் சீமான்.

Also Read: நடிகர் திலகத்தை தேசிய விருது வாங்காமல் தடுத்த உலகநாயகன்.. காரணத்தை கூறி நெகிழ வைத்த சம்பவம்

Trending News