தமிழ் சினிமாவில் அதிக பிரச்சினைகளை சந்தித்த படங்களில் ஒன்று சிவாஜியின் திரைப்படம். இப்போது ஏதாவது ஒரு படம் வெளியாகவில்லை என்றால் பல நடிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
ஆனால் சிவாஜி கணேசன் 1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்திற்காக பல எதிர்ப்புகளை சந்தித்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து சிவாஜி கணேசன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படம் திராவிட சித்தாந்தங்களும் திராவிட இயக்கங்கள் வேரூன்ற காரணமாக இருந்த படம்.
இப்படத்தில் இடம்பெற்ற வசனம் கோயில்களை வைத்து பூஜை பண்ற தளம் மட்டும் கல் கடவுளாக மாற முடியாது என்ற வசனம் போன்றவைகள் மூலம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி ஒரு பூசாரி ஒரு பெண்ணிடம் கோயிலில் வைத்து தவறாக நடப்பது போன்ற காட்சிகள் வைத்ததால் நிறைய ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது ராஜா ராஜியிடம் கூட இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ராஜராஜி தடை செய்ய முடியாது என கூற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.