வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எம்ஜிஆரை பார்த்து பதுங்கிய சிவாஜி.. பூரித்துப்போன மக்கள் திலகம்

Actor MGR and Sivaji Ganeshan: தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்றவர்கள் யார் என்றால் அது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி தான். இவர்களுடைய நடிப்பும், நேர்மையான குணமும், எத்தகைய இடத்துக்கு சென்று இருந்தாலும் அவர்களிடம் இருந்த பண்பு மாறவே இல்லை. இத்தகைய பண்புகள் நிறைந்த அவர்கள் காலத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோம் என்ற வருத்தத்தை நமக்கு கொடுக்கிறது.

அப்படிப்பட்ட இவர்கள் நல்ல நண்பர்களாகவும், புரிதலுடனும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை நாம் இப்பொழுது பார்க்கலாம். அதாவது இவர்கள் இருவரும் கூண்டுக்கிளி படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அப்பொழுது படப்பிடிப்பின் போது சிவாஜி நடித்துக் கொடுக்க வேண்டிய காட்சியை முடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் உடனே அங்கே இருந்து கிளம்பி விடுவார்.

Also read: ஜெயலலிதாவை வேவு பார்க்க வந்த தில்லாலங்கடி லேடி.. நம்பிக்கை இல்லாமல் எம்ஜிஆர் செய்த வேலை

திரும்பி ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் படப்பிடிப்புக்கு வருவார். இதையே சிவாஜி வழக்கமாக செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இதை கவனித்த எம்ஜிஆர், ஏன் சிவாஜி இப்படி செய்கிறார் என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார். அதற்காக இயக்குனர் ராமண்ணாவிடம் விசாரித்திருக்கிறார்.

அதன் பிறகு இயக்குனர் சிவாஜி இடம் சென்று நீங்கள் இப்படி செய்வதை எம்ஜிஆர் பார்த்து ஏன் இந்த மாதிரி பண்ணுகிறார் என்று என்னிடம் கேட்கிறார் என சொல்லி இருக்கிறார். அதற்கு சிவாஜி எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனால் சூட்டிங் நடக்கும் போது புகைப்பிடித்தால் அங்கே எம்.ஜி.ஆர் இருப்பார்.

Also read: மற்ற நடிகர்களை விட சிவாஜியின் புகழ் நிலைத்து நிற்க இதுதான் காரணம்.. எந்த நடிகர்களிடமும் இல்லாத பழக்கவழக்கம்

அவர் முன்னாடி எப்படி புகை பிடிப்பது எனக்கு சங்கடமாக இருக்கும். அவருக்கும் அது அவமரியாதையாக இருக்கும். அதனால் தான் தனியாக சென்று புகை பிடித்து விட்டு சூட்டிங் வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதை இயக்குனர் எம்ஜிஆர் இடம் சொல்லியபோது, தன் மேல் வைத்த மரியாதை காரணமாகத்தான் இப்படி சிவாஜி செய்கிறார் என்று நினைத்து பூரித்து போயிருக்கிறார்.

இதை பார்க்கும் பொழுது அந்த காலகட்டத்தில் இவர்கள் இருவருக்குமே பேரும் புகழும் சமமாக தான் இருந்தது. சிவாஜி நினைத்திருந்தால் அப்படி தனியாக போய் இருக்க தேவையே இல்லை. ஆனால் அவருக்கு முன்னால் புகை பிடித்தல் அது மரியாதையாக இருக்காது என்று எண்ணியது. அவர்களுடைய நட்பையும் எம்ஜிஆர் மேல் வைத்திருந்த மரியாதையும் சுட்டிக்காட்டுகிறது.

Also read: சிவாஜிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் 2 நடிகர்கள்.. எந்த சந்தேகமாக இருந்தாலும் உரிமையாக பேசி தீர்த்துக் கொள்வார்

Trending News