திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவாஜி, எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம்.. படையப்பாகாக ரஜினி கொடுக்க சொன்ன சம்பளம்

ஹீரோக்களின் சம்பளம் எல்லாம் தற்போது பல கோடிகளில் இருக்கிறது. படத்தை தயாரிப்பதை விட இவர்களுக்குத்தான் சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறது. இதனால் தற்போது தயாரிப்பாளர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சம்பளத்தை பற்றி பல சர்ச்சைகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கிறது .

இவர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற பல தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களுக்கு தற்போது உள்ள இளம் நடிகர்கள் மரியாதை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Also Read : வெறும் 15 நாட்களில் உருவான சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த எம் ஆர் ராதா

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்களாம். மேலும் இவர்கள் அதிகமாக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. எம்ஜிஆர் அதிகமாக 12 லட்சம் வரை அப்போது சம்பளமாக பெற்றிருந்தார்.

இப்போது கோடிகளுக்கு சமமாக அந்தத் தொகை அப்போது பார்க்கப்பட்டது. மேலும் அரசியலுக்கு சென்ற பிறகு எம்ஜிஆர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். சிவாஜி ஹீரோவாக நடித்த அதன்பின்பு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடைசியாக சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.

Also Read : சரவெடியாய் வெடித்த சிவாஜி.. தீபாவளிக்கு வெளியான 41 படங்கள்

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினியின் தந்தையாக சிவாஜி நடித்திருந்தார். இந்த கேரக்டரில் சிவாஜி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் ரஜினி கேட்டுக் கொண்டாராம். சிவாஜி கேட்கும் சம்பளத்தை ரஜினி கொடுக்க சொன்னாராம்.

அதேபோல் அந்தப் கதாபாத்திரத்திற்கு பக்காவாக சிவாஜி பொருந்தி இருந்தார். மேலும் படையப்பா படத்திற்காக அப்போது 25 லட்சம் சம்பளமாக சிவாஜி பெற்றிருந்தார். இதுதான் சிவாஜி தனது திரைவாழ்க்கையில் அதிகமாக பெற்ற சம்பளமாகும்.

Also Read : எம்ஜிஆர், சிவாஜியின் சாதனையை முறியடித்த அடுத்த தலைமுறை நடிகர்.. புது ட்ரெண்டை உருவாக்கிய ஆல்-ரவுண்டர்

Trending News