திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சிவாஜி, சரோஜா தேவியும் கோடியில் சம்பளம் வாங்கிய ஒரே படம்.. அதிகபட்சமாக வாங்கி கொடுத்த ரஜினி

Actor Sivaji: தமிழ் சினிமாவிற்கு 60களில் இருந்து பல அற்புதமான படங்களில் நடித்து ரசிகர்களை வசியம் செய்தவர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் சரோஜாதேவி. இவர்கள் இருவருக்கும் இன்றும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு படத்தில் கோடியில் சம்பளம் வாங்கி பெருமிதம் கொண்டிருக்கின்றனர். அதுவும் அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செய்திருக்கிறார்.

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய், சிம்ரன் ஜோடி சேர்ந்தனர். இவர்களுடன் சிவாஜி, சரோஜா தேவியும் இணைந்து நடித்தனர். இந்த படத்திற்காக சிவாஜி 100 ரூபாய் அட்வான்ஸ் தொகை வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார். 

Also Read: நெல்சன் மிரட்டும் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ரஜினியை தூக்கி விடும் பான் இந்தியா ஹீரோக்கள்

அதன் பின்பு சிவாஜிக்கு 10 லட்சம் ரூபாய்  சம்பளமாக ஒன்ஸ்மோர்  படத்திற்கு எஸ்ஏ சந்திரசேகர் கொடுத்தார். அதேபோல் தேவர் மகன் படத்திலும் 20 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் சிவாஜி. ஆனால் அந்த காலகட்டத்தில் தான் இளம் நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். 

என்னதான் சிவாஜுக்கு அது குறித்து கவலை இருந்தும் அதை வெளிக்காட்டவில்லை. பணத்தின் மதிப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுபடும். அப்படித்தான் அவர் இளம் நடிகர்களை விட குறைவாக சம்பளம் வாங்குவதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் இதை ரஜினி எப்படியோ உணர்ந்தார். அதனால் தான் படையப்பா படத்தில் சிவாஜிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை சூப்பர் ஸ்டார் கொடுத்துள்ளார்.

Also Read: இந்த ரஜினி பாட்டு உங்களுக்காக எழுதியது தான் தளபதி.. சரமாரியாக வறுத்தெடுத்த பயில்வான்

படையப்பா படத்திற்கு 10 லட்சம் ரூபாய் அல்லது 20 லட்ச ரூபாய் தான் கொடுப்பார்கள் என சிவாஜி யோசித்து இருந்தார். ஆனால் 1 கோடி கான காசோலையை கொடுத்தவுடன் அது 10 லட்சம் என்று நினைத்துக் கொண்டு வாங்கி சென்று விட்டார். வீட்டில் சென்று பார்த்ததும் தான் அது 1 கோடி என்று தெரிந்தது. அவர் பயந்து கொண்டு தவறாக கொடுத்துவிட்டார்கள் என்று தயாரிப்பாளர் கேட்டதற்கு, ‘இல்லை  இது உங்களுக்கான சம்பளம் 1 கோடி. ரஜினிகாந்த் உங்களுக்கு கொடுக்க சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.  

சிவாஜி முதல் படம் ஒரு கோடி வாங்கியதும் இதுதான் கடைசி படம் இதுதான். இதே போல் ஆதவன் படத்தில் சரோஜாதேவி நடிக்க வைக்க அவருக்கு சம்பளமாக ஒரு கோடி கொடுக்க சொல்லி இருக்கிறார் சூர்யா. அதை தன் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். சரோஜாதேவிக்கும் 1 கோடி சம்பளம் கொடுத்து சூர்யா சம்பளத்தில் பிடிக்கவில்லையாம். சரோஜாதேவிக்கும் இதுதான்  ஒரு கோடி வாங்கிய முதல் படமும் கடைசி படமாக இருந்துள்ளது.

Also Read: யாருப்பா அடுத்த சூப்பர் ஸ்டார்.? விஜய்யையும் , எஸ்.ஏ.சி-யையும் வச்சி செய்த ஜெயிலர் பட ஹூக்கும் பாடல்

- Advertisement -

Trending News