இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படமும் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்தியாவைச் சேர்ந்த மூன்று முக்கிய நடிகர்கள் ஒரே படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்த நிலையில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் விஜய் டிவியை சேர்ந்த மூன்று பிரபலங்கள் நாயகிகளாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் முக்கிய கேரக்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. சமீபத்தில் சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி வந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டுள்ளார்.

அதற்க விக்ரம் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஒதுக்கியுள்ள கேரவன் புகைப்படத்தை பகிர்ந்து அந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் மைனா நந்தினி அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புடிச்சா புளியங்கா புடிக்கணும் என்பதற்கு உதாரணம்தான் நம்ம சிவானி.