சின்னத்திரை பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான நடிகை சிவானி, அதன்பிறகு பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை சரியாக அனுதினமும் 4 மணிக்கு பதிவிட்டு ரசிகர்களை வசியம் செய்தார்.
எனவே 90 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சிவானி, அதன் பிறகு பல படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். இருப்பினும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிவானி நடித்துக்கொண்டிருக்கிறார். சிவானியை தவிர மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.
எனவே தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறியது சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படத்தையும் ட்ரெண்ட் ஆக்கினார். அத்துடன் இவர் கவர்ச்சியான உடையில் நடனமாடும் வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் நாய் குட்டியை தூக்கி கொஞ்சி இருக்கும்படி போட்டோ எடுத்துள்ளார். இதில் சிவானி கையிலிருக்கும் நாயாக பிறந்திருக்கலாம் என்று ரசிகர்கள் சிலர் ஏங்கித் தவிக்கின்றனர்.

மேலும் இந்த புகைப்படம் சிவானி கவர்ச்சியான உடை அணிந்து, தனது இடுப்பை காட்டி இளசுகளை கதிகலங்க வைக்கிறார் அத்துடன் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை தட்டி விடுகின்றனர்