வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காட்டிய கவர்ச்சி எல்லாம் வீணா போகல.. முழு நேர ஹீரோயினாக அறிமுகமாகும் ஷவானி

எப்படியாவது ஒரே நாளில் நாம் பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்து பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். ஆனால் உழைப்பால் ஒரு நாளில் பணக்காரனாக முடியாது. அதற்கு லாட்டரி சீட்டில் பம்பர் விழுந்தால் தான் நமக்கு அதிர்ஷ்டம் கைக்கெட்டும்.

அவ்வாறு கேரளா மாநிலத்தில் உள்ள லாட்டரியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பம்பர். வேதா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் 8 தோட்டாக்கள் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்குகிறார்.

பம்பர் படத்தில் பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷிவானிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பம்பர் படத்தின் மூலம் கிடைத்துள்ளது.

எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் அனுமதியுடன் பம்பர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்படத்திற்கான முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் எடுக்கப்பட உள்ளது.

இப்படத்தில் வெற்றிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர். சின்னத்திரையில் இருக்கும்பொழுதே ஷிவானிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்த நிலையில் தப்போது வெள்ளித்திரையில் ஷிவானியை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

shivani-vetri
shivani-vetri

Trending News