விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். பின்பு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அதே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் உடன் சிவானி இணைத்து இருவரும் காதல் செய்து வருவதாக கூறி வந்தனர். ஆனால் இருவரும் இதனை முற்றிலுமாக மறுத்தனர்.
என்னதான் இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என மறுத்தாலும் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தற்போது வரை அவர்கள் காதலிப்பது உண்மை தான் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவ்வபோது இருவரும் ஏதாவது டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது, டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிடுவது என சேட்டைகள் செய்து வருகின்றனர்.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை கவர்ச்சியை தூக்கி எறிந்துவிட்டு சாதாரண புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. அதற்கு ஒரு தரப்பினர் அவருடைய காதலர் பாலாஜி முருகதாஸ் சொன்னால்தான் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில்லை என கூறினர். ஆனால் சிவானி அப்படியெல்லாம் கிடையாது என கூறி தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் சிவானியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.