வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் சேதுபதியை புகழ்ந்த பிக்பாஸ் நடிகை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.

இது மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான தனது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். புகைப்படம் மட்டும் அல்லாமல் டான்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் மூலம் 19 வயதே ஆன நடிகை ஷிவானிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது சக போட்டியாளராக பங்கேற்றிருந்த பாலாவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

vijay sethupathi shivani narayanan
vijay sethupathi shivani narayanan

இந்நிலையில் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை ஷிவானி நேரில் சந்தித்து உள்ளார். விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “Man of Simplicity” என விஜய்சேதுபதியை குறிப்பிட்டுள்ளார். விஜய்சேதுபதி படத்தில் ஷிவானி நடிக்கிறாரா? அல்லது இது சாதாரண சந்திப்பா என தெரியவில்லை.

Trending News