வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

BMW காருக்குள்ள கவர்ச்சி கலவரம் செய்த சிவானி.. ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் லைக்ஸ் தாண்டிய புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றார். இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் இணைந்து பல சேட்டைகள் செய்தனர் அதன்மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பலரும் கூறி வந்தனர். ஆனால் இதைப் பற்றி இவர்கள் இருவருமே வெளிப்படையாக எதுவும் கூறவில்லை கேட்டால் நாங்கள் நண்பர்கள் என கூறினர்.

இதன் மூலம் ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமான வேறு அடுத்தடுத்து பெரிய அளவில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இவர் எதிர்பார்த்தபடி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார்.

shivani narayanan
shivani narayanan

தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் நடித்து வரும் ஷிவானி நாராயணன் பிஎம்டபிள்யூ கார் வாங்கியது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு பிஎம்டபிள்யூ கார் ரொம்ப பிடிக்குமாம் ஆனால் இத்தனை நாள் வாங்க முடியாமல் இருந்துள்ளார். ஆனால் தற்போது 1.38 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார்.

மேலும் தற்போது இவருக்கு ஒரு சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளதால் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் இவர் மீண்டும் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending News