வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படம்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த இயக்குனர்!

விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன், அதன்பிறகு பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இதைத்தொடர்ந்து ஷிவானி மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஷிவானி பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விஜேஎஸ் 46 படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஷிவானி போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்ட உள்ளார் . இந்த நிலையில் ஷிவானி, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த தகவலை ஆர் ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷிவானி உடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சரவணனுடன் சேர்ந்து இயக்கி கடந்த 2020ஆம் ஆண்டு OTT-யில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான ‘பதாய் ஹோ’ என்ற காமெடி திரைப்படத்தை பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனை கதாநாயகியாக வைத்து தமிழில் ‘வீட்ல விசேஷம்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்ய உள்ளார்.

எனவே ஆர் ஜே பாலாஜி இயக்கும் வீட்டில் விசேஷம் திரைப்படத்தில் ஷிவானி உடன் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இவ்வாறு ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் வரிசையாக படங்களில் கமிட்டாகி முன்னணி கதாநாயகியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால் அவர் நடிக்கும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஷிவானி நாராயணனை வைத்து ஆ ர்ஜே பாலாஜி இயக்கம் உள்ள வீட்டில் விசேஷம் திரைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் உறுதிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளார்.

Trending News