Siddharth, Shivraj Kumar: நேற்றைய தினம் வெளியான படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படம் சித்தார்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் சித்தா படம் தான். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை வெட்ட வெளிச்சமாகவும் மிகவும் நாசுக்காக இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் சித்தா படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக பல இடங்களுக்கு சித்தார்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் பெங்களூரில் செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த் இந்த படத்தைப் பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் கன்னட அமைப்பினர் அங்கே பிரச்சனையில் ஈடுபட்டிருந்தனர்.
Also Read : நேரம் பார்த்து சீண்டிப் பார்க்கும் சன் பிக்சர்ஸ் மாறன்.. ஜெயிலர் வீடியோ வெளியிட்டு பின் டெலிட் செய்த சம்பவம்
அதாவது காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்கான பிரச்சனையைப் பேசி தமிழ் படங்கள் இங்கு வெளியிடக்கூடாது என சித்தார்த்தை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பிரளயமே உருவாகி இருந்தது.
இந்நிலையில் கன்னட சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் நரசிம்மனாக மிரட்டிய சிவராஜ்குமார் கன்னடத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நேரடியாகவே இந்த நிகழ்வுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
Also Read : தட்டு தடுமாறிய ஜெயிலர்.. 18 நாளில் சாதித்து காட்டிய அட்லி, இனி ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது
மேலும் கன்னட மக்கள் தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் சினிமா மீது மிகுந்த மரியாதை மற்றும் விருப்பம் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்வு தன்னை வேதனை அளித்ததாகவும் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாக சிவராஜ் குமார் கூறியிருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இவ்வாறு சொன்னது பலராலும் பாராட்டப்படுகிறது.
இதற்கு காரணம் அவரது படங்கள் இங்கு வெளியாவது என்று இருந்தாலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவர் இவ்வாறு இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுவே கன்னட உலகிலிருந்து வந்த ரஜினி சித்தார்த்துக்காக குரல் கொடுக்காத நிலையில் சிவராஜ்குமார் இவ்வாறு மன்னிப்பு கேட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.