வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக் பாஸ் வீட்டில் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் திடீரென்று அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களுள் ஒருவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அத்துடன் வார இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால், இந்த வாரத்தில் மட்டும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் கமலஹாசன் திடீரென்று டெல்லிக்கு ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளார்.

Also Read: 9 இடங்களும் ஷிவினுக்கு தகுதி இல்லை.. ஒரே டாஸ்கால் கொழுந்துவிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

ஆகையால் இந்த வாரத்திற்கான வீகென்ட் படப்பிடிப்பு முன்கூட்டியே நடத்தப்பட்டது. இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏடிகே திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டில் சோர்வுடன் காணப்பட்டார்.

அடிக்கடி இவர் தன்னுடைய மகனை நினைத்து அழுது புலம்பி கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாத ஏடிகே விரைவில் குணமடைந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா அல்லது வாக் அவுட் ஆகிவிடுவாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

அதுமட்டுமின்றி ஏற்கனவே நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 7 பேரில் தனலட்சுமி தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் கடந்த இரண்டு வாரமும் எதிர்பாராத போட்டியாளர் வெளியேறுவதால் அப்படிதான் இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் பஜார் போல் கத்திக் கொண்டிருக்கும் தனலட்சுமி வெளியேறுகிறார்.

ஒருவேளை ஓட்டின் அடிப்படையில் குறைந்த ஓட்டுகளை பெற்ற தனலட்சுமி மற்றும் உடல்நல நலக்குறைவால் ஏடிகேவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து இருந்து வெளியேறி 2 எலிமினேஷன் இந்த வாரம் நடைபெறப்போகிறது. எனவே இந்த பரபரப்பான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Also Read: ஏற்கனவே டிஆர்பி மண்ணை கவ்விடுச்சே.. இதுல கண்டெண்ட் கொடுக்கும் பஜாரியை கழட்டி விடும் பிக் பாஸ்

Trending News