கடந்த நான்கு நாட்களாக விடாமுயற்சி ஏன் வெளிவரவில்லை, எப்ப வெளிவரும் என்ற விவாதம் ஓய்ந்தபாடில்லை. தற்போது வணங்கான் படத்தின் ப்ரோமோஷன் தொடங்கியுள்ளது.
பழைய பாலாவின் மொத்த நம்பிக்கையும் வணங்கான் படத்தின் மூலம் வெளிவரும் என மொத்த கோலிவுட் வட்டாரமே காத்துக் கொண்டிருக்கிறது. அருண் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மாநாடு படத்தின் வெற்றியை பார்த்தபின் சுரேஷ் காமாட்சி வணங்கான் படத்தை தயாரித்துள்ளார். சமிபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறுகையில் அஜித் சார் Strength தெரியாமல் மோதக்கூடாது எனக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு வேலை விடாமுயற்சி பொங்கலுக்கு வந்திருந்தால் வணங்கான் படத்தை தள்ளி போட்டு இருப்பேன் என்று நெத்தி பொட்டில் அடித்தது போல கூறியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி இப்படி கூறியிருப்பது படத்தின் பிரமோஷனுக்காகவா? அஜித் ரசிகர்களை கவரவா? என சமூக வலைத்தளங்களில் பல கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆனால் ஒரு தயாரிப்பாளரா வியாபார தந்திரம் தெரிந்தவர் மட்டுமே அஜித்தின் பலத்தை உணர முடியும், அப்படி தான் சுரேஷ் காமாட்சி Correct-டா காய் நகர்த்தி உள்ளார்.
அடேங்கப்பா! என்னதான் படம் வரவே இல்ல நாளும் அஜித்தோட மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.