வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

போயஸ் கார்டன்ல நான் வீடு வாங்க கூடாதா.? ரஜினி தூக்கி விட்டதை மறந்து கெத்து காட்டிய ராயன்

Dhanush in Raayan: எந்த வேறு விஷயம் சொன்னாலும் அதை ஜெயித்துக் காட்டிய பிறகு சொன்னால்தான் இந்த உலகம் நம்மளை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கு ஏற்ப தனுஷ் சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்து 22 வருசத்துல 50வது படத்தை வெற்றிகரமாக முடித்து காலரை தூக்கிவிட்டு கெத்தாக நிற்கிறார். அந்த வகையில் ஐம்பதாவது படம் மிகப் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரே இயக்கி எழுதி நடித்து ராயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமான கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் இவருடைய கூட்டணியில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் போட்ட பட்ஜெட்டையும் தாண்டி வசூலில் இரட்டிப்பு லாபத்தை கொடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது. அதே மாதிரி இப்படமும் இவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இதில் தனுசுடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்திப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் மெட்டமைத்து கொடுத்திருக்கிறார்.

ஓவர் கெத்து காட்டிய ராயன்

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். படம் எப்படி இருக்குமோ இல்லையோ தெரியாது, ஆனால் தனுஷ் பாடி ஏ ஆர் ரகுமான் இசையமைத்த உசுரே நீதானே என்ற பாடலில் ஏ ஆர் ரகுமான் பாடியதற்காகவே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

மேலும் இதில் கலந்து கொண்ட தனுஷ் அவர் கடந்து வந்த பாதைகளை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அந்த வகையில் ஒன்றுமே தெரியாமல் சினிமாவிற்குள் வந்த என்னை எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த குருநாதரை செல்வராகவன் தான் என்று அண்ணனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அது மட்டும் அல்ல எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்து, சாப்பிட சொல்லிக் கொடுத்து, எப்படி வாழ்க்கையில் போராட வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததும் என் அண்ணன் தான் என்று கூறியிருக்கிறார்.

அன்று குடிசையில் இருந்த என்னை இப்பொழுது போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் அவர் தான் என்று அண்ணனுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் என்னை அந்த அளவிற்கு டார்ச்சர் பண்ணி நடிக்க வைத்து இப்பொழுது இந்த அளவுக்கு வளர்த்து விட்டிருக்கிறார். அதனால் தான் இப்பொழுது போயஸ் கார்டனில் என்னால் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிந்தது.

ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா? அதுக்கு என்ன எல்லாம் பேச்சு எவ்வளவு அவதூறுகளை சுமந்தேன் என்று தனுஷ் பேசி இருக்கிறார். அதாவது நான் யாருடைய ரசிகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் எப்படியாவது தலைவரை பார்த்து விட வேண்டும் என்று 16 வயதில் போயஸ் கார்டனில் சென்று ரஜினியின் வீட்டை பார்க்க ஆசைப்பட்டேன். அப்பொழுது அங்கே இருந்த போலீஸிடம் கெஞ்சி அந்த ஏரியாவிற்கு போனேன்.

அங்கே போய் பார்த்தால் ஜெயலலிதா அம்மா வீடு இந்த பக்கம், அந்தப் பக்கம் ரஜினி சார் வீடு இருந்தது. இதற்கு இடையில் எப்படியாவது நாம் ஒரு சின்ன வீடு கட்ட வேண்டும் என்று அந்த வயசில் ஒரு கனவு கண்டேன். அதற்காக நான் அப்பொழுது போட்ட விதைதான் இப்பொழுது நான் ஆலமரமாக முளைத்திருக்கிறேன். அந்த வயதில் வெங்கடேஷ் பிரபுவுக்கு வந்த ஆசைக்கு இப்பொழுது தனுஷ் கொடுத்த கிப்ட் தான் போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு என்று கெத்தாக பேசியிருக்கிறார்.

ஆனால் ஒரு காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்த பொழுது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான இவர் சிம்புவுக்கு போட்டியாக வந்த பொழுது கொஞ்சம் பின் தங்கி தான் இருந்தார். அந்த சமயத்தில் ரஜினி கொடுத்த ஆதரவு கை கொடுத்து தூக்கி விட்டதால் தான் அவருக்கு அப்பொழுது வாய்ப்புகளும் வெற்றிகளும் குவிந்தது. ஆனால் அதை மறந்து தற்போது ராயன் இசை மேடையில் முழுக்க முழுக்க என்னுடைய அண்ணனுக்கும் என்னுடைய நடிப்புக்கும் கிடைத்த கிப்ட் என்று கெத்து காட்டி பேசி இருக்கிறார்.

அந்த வகையில் இவரிடம் என்னதான் திறமைகள் இருந்திருந்தாலும் ரஜினி மட்டும் கை கொடுக்கவில்லை என்றால் தற்போது சிம்பு எந்த நிலைமையில் இருக்கிறாரோ, அதே மாதிரி தான் தனுஷின் நிலமையும் இருந்திருக்கும். இதுதான் சொல்பவர்கள் ஜெயித்த பிறகு என்ன வேணாலும் பேசலாம் எதை வேணாலும் செய்யலாம் என்று. அது சரி என்பதற்கு ஏற்ப தனுஷ் அவருடைய பேச்சின் மூலம் நிரூபித்துக் காட்டி விட்டார்.

தனுஷின் அசுர வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி

Trending News