செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எச்.வினோத்தை பார்த்து எப்படி பேசணும்னு கத்துக்கோங்க.. தில் ராஜை அசிங்கப்படுத்திய சம்பவம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களை தாண்டி நம் தமிழ் சினிமாவிற்கு இன்று ஒரு பெருமை இருக்கிறது அதுவும் நடிகர்களை அரசியல்வாதியாக மாற்றுவார்கள் அந்த அளவிற்கு நடிகைகள் மேல் ரசிகர்கள் அலாதி பிரியத்தை வைத்து வருவார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது இப்போது உள்ள காலகட்டத்தில் அது வேற மாதிரி யாக மாறி அடிதடி, கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகிறது.

இதைப் பயன்படுத்தி சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பணம் சம்பாதிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் இதை மனதில் வைத்து வெளியில் காட்டிக் கொள்ளாமல் அனைவரும் சமம் என்று பேசி வந்த சூழ்நிலையில். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் நம்பர் ஒன் விஜய் என்று பேசி தமிழ் நடிகர்கள் ஒற்றுமையை குறைத்து ரசிகர்கள் இடையே சண்டை வர வைத்து விட்டார்.

Also Read : பிழைப்புக்காக திரித்து பேசுவாங்க.. வெளுத்து வாங்கிய துணிவு பட இயக்குனர் எச்.வினோத்

ஆனால் இயக்குனர் எச்.வினோத் இந்த பொங்கலுக்கு இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு படங்களுமே வெற்றியடைய வேண்டும் இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். எனது படம் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. இவர்கள் நமது கதாநாயகர்கள் இருவரும் வெற்றி பெற வேண்டும் என்று நல்ல முறையில் பேசி இருக்கிறார்.

இதுதான் நம் இயக்குனர்களுக்கும் மற்ற மொழியில் உள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு உள்ள வித்தியாசம். நம் ரசிகர்களின் மனதை புரிந்து வைத்து எச்.வினோத் பேசியுள்ளது அனைவருக்கும்அனைத்து ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் படத்தை தொடர்ந்து மூன்று படங்கள் எடுத்தும் இதுவரை அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை தயாரிப்பாளர் போனி கபூர் கூட இன்றுவரை பேசவில்லை.

Also Read : டென்ஷனாவே வேலை பார்த்து போர் அடிச்சிடுச்சு.. கமலுக்கு முன் ரிலாக்ஸாக ஒரு கூட்டணி போட போகும் வினோத்

எச்.வினோத் ஏதோ தெரியாமல் பேசி விட்டார் தன் படம் ஓட வேண்டும் என்ற ஆசையில் பேசுகிறார் என்று நினைத்த பொழுது மீண்டும், மீண்டும் அதை தமிழ்நாட்டிற்கு வந்து மேடையில் பேசி பிரச்சினையை பெரிதாக்கினார். இந்த படத்தில் நடித்த, நடிகர்களும் இவர் பேசிய பேச்சுக்கு எதிர்வினை தெரிவிக்காமல் அவர் சொன்னதையே சொன்னார்கள். இப்பொழுது அவர்களுக்கும் பிரச்சனை பெரிதாகிவிட்டது.

இனிமேல் இந்த பிரச்சனை போக போவது இல்லை இதை மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ளப் போவதுமில்லை. ஆனால் நம் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் இவர்கள் புரிந்து கொண்டு எப்பொழுதும் போல் இருந்தால் நம் தமிழ் சினிமாவிற்கு நல்லது இல்லையென்றால் கூடிய விரைவில் அனைத்தும் பிளவுபடும்.

Also Read : சிறுத்தை சிவாவை ஓரங்கட்டிய அஜித்.. தூக்கிவிட்ட இயக்குனருக்கு AK63 பட வாய்ப்பு.!

Trending News