புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மேடையில வெச்ச ஐஸ் வேலையை காட்டுது.. தனுசுக்கு தண்ணி காட்டிய வெற்றிமாறன்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். கடைசியாக 2019 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படம் அசுரன். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வேற எந்த படமும் வெளிவரவில்லை. தற்பொழுது தனுஷின் வெற்றி படத்தின் 2- ஆம்  பாகத்தினை எடுக்காமல் காலம் தாழ்த்துவது பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது. 

இவர்களது காம்போவில் வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் தனுஷ் கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள்  அவ்வப்போது இணையத்தில் வெளிவந்தது.

Also Read: வலுக்கட்டாயமாக லிப் லாக் சீனில் நடித்த 3 நடிகைகள்.. எதிர்பாராமல் வச்சு செய்த தனுஷ்

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது சூரி மற்றும் விஜய் சேதுபதி என இரு ஹீரோக்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் குறித்து மும்முரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தின் மூலம் கைகோர்க்க உள்ளனர். இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ஹீரோவை வைத்து ஒரு படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்ரை சந்தித்த இவர் மூன்று கதைகளை கூறியுள்ளார். அதில் ஒரு கதை பிடித்ததால் வெற்றிமாறன் உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ்  தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் எனக்கு தமிழில் பிடித்த இயக்குனர் வெற்றிமாறன் தான் என்று ஆர் ஆர் ஆர் படத்தின் பிரமோஷனில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இவர்களது கூட்டணியில் புதிய படம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பொழுது மேடையில் வைத்த ஐஸ் இப்பொழுது ஒர்க் அவுட் ஆகி உள்ளது என விமர்சகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை முடித்த கையோடு தனுஷின் வடசென்னை இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக கூறியிருந்தார். அதிலும் படத்தில் வரும் ராஜன் கதாபாத்திரத்தை வைத்து வெப் சீரியஸ் உருவாக உள்ளதாக கூட தகவல் வெளியானது. ஆனால் அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு தற்பொழுது ஜூனியர் என்டிஆர் உடன் புதிய படத்தில் கைகோர்த்து இருப்பது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. தற்பொழுது இயக்குனர் தனுஷிற்கு தண்ணி காட்டி வருகிறார் என்பது போல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேச்சு கிளம்பி உள்ளது.

Also Read: ஏத்திவிட்ட ஏணியவே பதம் பார்த்த தனுஷ்.. பயங்கர அப்செட்டில் இருக்கும் இயக்குனர்

Trending News