புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கலியுகத்திற்கு செல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. மாதவன் பட நடிகையின் வித்தியாசமான முயற்சி!

கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக இறக்குமதியானார். விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். என்னதான் பலரும் பாராட்டினாலும் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ வெளியான மாறா திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த படியே இல்லாததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

தற்போது இவர் நடிப்பில் உருவாக உள்ள கலியுகம் என்ற திரைப்படத்தின் பூஜை நடை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் பூஜையை பார்த்த சில ரசிகர்கள் ஏற்கனவே மாறா திரைப்படம் எங்களுக்கு கலியுகம் போலதான் இருந்தது.

shraddha srinath
shraddha srinath

இந்த படத்திற்கு நீங்கள் கலியுகம் என்றுதான் பெயரே வைத்துள்ளீர்கள் எப்படி இருக்கப் போகிறதோ எனவும், மாறா திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வெறுத்துப் போனதால் தற்போது கலியுகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத்விற்கு கலியுகம் திரைப்படம் வெற்றியாக வில்லை என்றால் இவர் மட்டுமல்ல நாங்களும் தான் கலியுகம் போக வேண்டும் என ரசிகர்கள் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.

Trending News