விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் அதற்கு முன்பே இவன் தந்திரன், காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்திருந்தார்.
விக்ரம் வேதா படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் நானி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ஜெர்சி படம் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்திருந்தார்.
குடும்ப பாங்கான வேடம் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் அவ்வப்போது கலக்கி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் வித விதமான உடையணிந்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை சென்றுள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹோட்டல் அறையில், நீச்சல் உடை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் யார் சொன்னது என்னால் 26 டிகிரி குளிரில் நீச்சல் உடை அணிய முடியாது என்று? எனவும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அடுத்தடுத்து விஷாலுடன் சக்ரா, மாதவனுடன் மாறா மற்றும் கலியுகம் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.