காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இப்படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் மேகா திரை படத்தில் வந்த ஒரு பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
அதன்பிறகு டார்லிங் மற்றும் வில் அம்பு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒரு சில படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை தட்டிப் பறித்து சென்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சக்ரா. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை.
அதுமட்டுமில்லாமல் சக்கரா படத்தில் சிருஷ்டி டாங்கேவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. அதனால் கோபமடைந்த சிருஷ்டி டாங்கே இனிமேல் எந்த நடிகர் படத்தில் நடித்தாலும் கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.
அதனால் வி கணேஷ் பாபு இயக்கி நடிக்கும் கட்டில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபத்திரம் கொடுத்துள்ளதாகவும், மற்ற படத்தில் நடித்தது போல் துருதுருவென கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் தமிழகத்தின் கலாச்சார பண்பாட்டு விஷயங்கள் மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் அளிக்கப்படும் மரியாதை கூட்டுக்குடும்ப வாழ்க்கை இவை அனைத்தும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாள் தான் இப்படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் அதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கிறேன் அதனால் வயிற்றில் பிள்ளையை சுமக்கும் பெண்ணின் வலியை முகத்தில் காண்பிக்க வேண்டும். அதற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து உள்ளேன் என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் நான் அனுபவிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனவும் கூறியுள்ளார்.