புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தன் கணவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஸ்ரேயா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து ரஜினியுடன் “சிவாஜி” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒரே படத்தின்மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதற்கேற்ப, வயசும் இளமையும் இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், தனுஷ் என வரிசை கட்டி படங்களில் நடித்தார் ஸ்ரேயா. மாமனாரையும் விடமாட்டேன், மருமகனையும் விடமாட்டேன் என ஒரே ஆண்டில் ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார்.

தமிழில் புகழடைவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழுடன் ஒப்பிடுகையில் தெலுங்கில் இவர் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் வாய்ப்பு குறையவே சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

shriya saran family
shriya saran family

கார்த்தியுடன் தோழா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

அதன்பின் கணவருடன் செல்ஃபி, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். அப்படித்தான் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ஸ்ரேயா பாட்டுப்பாட, அவர் கணவர் நடனமாடுகிறார். கடைசியில் இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடுகின்றனர் அந்த வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

Trending News