டாப் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். படங்களில் குடும்ப குத்து விளக்காகவும், பாடல்களில் கிளாமர் என ரசிகர்களை கிறங்கடித்தார். வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரேயா.
எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் வெகு விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் ஜோடி போட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
சிவாஜி படத்தின் மாபெரும் வெற்றி அவருக்கு பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒன்றுக்கு இரண்டு முறை ஜோடி போட்டார்.
ஆனால் ஸ்ரேயா தன்னுடைய கேரியரில் செய்த ஒரே ஒரு தவறு என்னவென்றால் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது தான்.
அதுவரை உச்சத்தில் இருந்த ஸ்ரேயாவின் மார்க்கெட் அந்த படத்தில் நடித்த பிறகு மளமளவென சரிந்து சினிமாவில் ஆளே அட்ரஸ் இல்லாமல் ஆகி விட்டார். பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இருந்தாலும் பட வாய்ப்புகள் கிடைத்தால் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கும் ஸ்ரேயாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் வைரல் ஆகி விட்டது.