என்னால் காதலரை திருப்திப்படுத்த முடியவில்லை.. லவ் பிரேக்கப் பற்றி முதல் முறையாக வாய் திறந்த ஸ்ருதிஹாசன்

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிகாசன் சமீபத்தில் தன்னுடைய வெளிநாட்டு காதலரை பிரேக்கப் செய்துவிட்ட செய்தி இந்திய சினிமாவில் காட்டுத்தீ போல் பரவியது. அதன் பிறகு சில காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். சினிமாவுக்கு வந்த புதிதிலேயே மளமளவென ஒரு உச்சத்தை தொட்டார். அதிலும் கவர்ச்சி தேசமான தெலுங்கில் ஸ்ருதிஹாசன் காட்டிய காட்டுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கவர்ச்சியும் சரி, நடிப்பும் சரி ஒரே அளவில் மெயின்டெயின் செய்து வந்தார். இதற்கிடையில் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் ஸ்ருதிகாசன். அவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதும் தனிமையில் சந்திப்பது என கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருந்தார்.

அதன் காரணமாகவோ என்னவோ திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனை ஸ்ருதிஹாசனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் காதலை முறித்துக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் உண்மைக் காரணம் என்னவென்பதை சொல்லாமல் நீண்ட காலமாக மௌனம் காத்து வந்தார் ஸ்ருதிஹாசன்.

shruthi-hassen-boyfriend
shruthi-hassen-boyfriend

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலரை ஏன் பிரிந்தேன் என்ற காரணத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் ஸ்ருதிகாசன், காதலர் நினைத்த அளவுக்கு தன்னால் அவருக்கு திருப்தி கொடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். இரட்டை அர்த்தம் எதுவும் இல்லை. அவர் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் என்னால் சரிவர கொடுக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காதல் முறிவுக்கு பிறகு நீண்ட நாட்கள் ஸ்ருதிஹாசன் ஒரே அறையில் தனிமையில் இருந்து வந்ததும், ஒருகட்டத்தில் தன்னைத்தானே மறக்கும் அளவுக்கு சென்றார் என்ற தகவலும் வெளியானது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.