தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசனுக்கு நடிகைகள், காதல் திருமணம், கிசுகிசுக்கள் என்பது சர்வசாதாரண விஷயம் தான். அதைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை.
அந்த வகையில் கமலஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியின் விவாகரத்திற்கு பிறகு அவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தவர் தான் சாரிகா. இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஸ்ருதிகாசன்.
தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் எந்த இடத்திலுமே நான் ஒரு முன்னணி நடிகரின் மகள் என்று பந்தா செய்து கொள்வதில்லை.
இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கமல் ஹாசன் மற்றும் சாரிகா இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்வது ஒரு வகையில் நல்ல விஷயம்தான் என கூறியுள்ளது தூக்கிவாரிப் போட்டுள்ளது.
கமல் மற்றும் சாரிகா இருவரும் விவாகரத்து பெற்று தற்போது தனித்து வசித்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், இருவரும் பிரிந்தால் தான் நன்றாக வாழ முடியும் என்று யோசித்த பிறகு வேறு ஒரு காரணத்திற்காக சேர்ந்து வாழ முடியாது.
தற்போது இருவருமே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும்போது அவர்கள் இருவரும் பிரிந்தது நல்லதுதான் என்பதே என் கருத்து என்று கூறியுள்ளார்.