இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதிகாசன் சமீபத்தில் தன்னுடைய முதல் காதலரைப் பிரிந்து தவித்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஒரு இசைக் கலைஞருடன் காதலில் விழுந்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை. பிரபலமான நடிகை என்று சொல்வதை விட கிளாமர் கடல் என்பதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.
தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் கிளாமரில் உச்சம் தொட்டவர் ஸ்ருதிஹாசன். அதுவும் ஹிந்தி சினிமாவில் ஸ்ருதிஹாசன் படு மோசம். இது ஒருபுறமிருக்க கடந்த சில வருடங்களாக ஸ்ருதிகாசன் வெளிநாட்டு புகைப்படக்கலைஞர் மைக்கல் கோர்ஸில் என்பவரை காதலித்து வந்தார்.
இருவருக்கும் இடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக காதல் பிரேக் அப் ஆனது. அதனைத் தொடர்ந்து காதல் விரக்தியில் தனிமையில் இருந்து வந்தார் ஸ்ருதிஹாசன். அந்தத் தனிமையை இனிமையாக்கி தற்போது ஸ்ருதிஹாசனின் புதிய காதலராக ஒப்பந்தமாகியுள்ளார் சாந்தனு ஹசாரிகா.
இவர் ஒரு பிரபலமான டூடுல் கலைஞராம். சமீபத்தில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால், ஸ்ருதிஹாசன் தன்னுடைய பழைய நிலைமைக்கு வர இவர்தான் முக்கிய காரணமாம்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் முன்னாள் காதலர் மைக்கேலிடம் கிடைக்காத சுதந்திரமும், அரவணைப்பும் சாந்தனு ஹசாரிகாவிடம் அதிகமாக இருப்பதாகவும், இவரை என் வாழ்நாளில் இனி இழக்க மாட்டேன் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் கூறிவருகிறாராம் ஸ்ருதிஹாசன்.