கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வி அடைந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் வேறு ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஸ்ருதிகாசன் முன்னதாக வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். சமீபத்தில் கூட இருவரது திருமணம் பற்றி கமலஹாசன் ஓகே சொல்லியதாகவும், அந்த வெளிநாட்டு புகைப்பட கலைஞருக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய கலாச்சாரங்களை சொல்லிக்கொடுத்து வேட்டி கட்டி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஆனால் யார் கண் பட்டதோ. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்த சில நாட்களிலேயே ஸ்ருதிஹாசனுக்கும் அந்த புகைப்பட கலைஞருக்கும் இடையில் பிரேக்கப் ஆனது. அதன்பிறகு ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தனிமையில் இருந்து வந்தார்.
தனிமையே தன்னை விழுங்கி விடும் போல என பயந்து கொண்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான கிராக் என்ற திரைப்படம் சூப்பர் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய இரண்டாவது காதலரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடன் பொதுவெளியில் கைகோர்த்து சென்றுள்ள வீடியோ வைரல் ஆனது.
அதனைத் தொடர்ந்து சாந்தனு ஸ்ருதிஹாசனை கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில்கூட ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.