உலக நாயகன் கமலின் வாரிசான ஸ்ருதிஹாசன் இன்று சினிமாவில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவர இருந்த பல சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய மோசமான ஆட்டிடியூடால் இழந்துள்ளார். சித்தார்த், நாக சைதன்யா, தனுஷ் என இளம் நடிகர்களுடன் டேட்டிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்று விட்டார்.
2000 ஆண்டிலேயே ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுருதிஹாசன். வருங்கால சினிமாவில் உலக நாயகன் பெயரை காப்பாற்றுவார் என எதிர்பார்த்தால் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். இப்பொழுது இரண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவருக்கு வந்த நிறைய படங்களை இவர், ஓவர் ஹெட் வெயிட்டில் நிராகரித்துள்ளார்.தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, மூன்று ,புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் எந்த படமும் ஹிட் ஆகவில்லை. அதனால் பெயிலியர் ஹீரோ என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவர் பக்கம் வருவதே இல்லை.
இதனால் தமிழ் வேண்டாம் என தெலுங்கு பக்கம் சென்று விட்டார் அங்கே பாலையா, சிரஞ்சீவி போன்ற மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போட்டார், அங்கேயும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்ததால் இவருக்கு கொஞ்சம் மார்க்கெட் இருக்கிறது.
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தில் இவர்தான் முதலில் ஹீரோயின் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் போன்ற சின்ன ஹீரோக்களுடன் நான் நடிக்க மாட்டேன் என இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இவரே அப்பொழுது மார்க்கெட் இல்லாத ஹீரோயின் தான், ஏன் சிவகார்த்திகேயனை நிராகரித்தார் என்று தெரியவில்லை.
வளர முடியாமல் போனதற்கு சொல்லும் கம்பி கட்டிய கதை
அதன் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் பையா. இந்த படத்தின் ஆரம்பத்தில் சுருதிஹாசனை தான் கார்த்திக்கு ஜோடியாக போட்டிருந்தனர். படம் பத்து நாட்கள் ஷூட்டிங் போய் உள்ளது. அதன் பின்னர் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என பிரச்சனை செய்து வெளியேறிவிட்டார். இப்படி தொடர்ந்து மோசமான ஆட்டிட்யூடால் கேரியரை இழந்த இவர் இன்று என் உடலில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது, அதிக அளவு டிப்ரஷன் காரணமாக அவதிப்படுகிறேன் என்று தோத்ததற்கு காரணம் சொல்கிறார்.
- இதற்குதானே ஆசைப்பட்டாய் ஸ்ருதிஹாசன்
- 3 ஹீரோக்களுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்
- எல்லை மீறிய ஸ்ருதிஹாசன்