ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸில் கதறி அழுத ஸ்ருத்திகா.. காரணம் இதுதான்

Shruthika : திரை குடும்பத்தில் இருந்து வந்த ஸ்ருத்திகா சூர்யாவின் ஸ்ரீ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவருடைய வெகுளியான பேச்சு ரசிகர்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. இதனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

இந்த சூழலில் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 18 நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா பங்கு பெற்றிருக்கிறார். ஹிந்தியில் பங்கு பெறும் முதல் தமிழ் போட்டியாளர் என்ற பெருமையும் ஸ்ருத்திகா தான். அங்கும் இவர் ஆரம்பத்தில் கலகலப்புடன் எல்லோருடன் பழக ஆரம்பித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதறி அழுத ஸ்ருத்திகா

ஆனாலும் அவ்வப்போது தமிழ் வார்த்தைகள் ஸ்ருத்திகா பேச ஆரம்பித்தார். இந்த சூழலில் தமிழ்நாட்டில் இருந்து ஸ்ருத்திகா வந்ததால் பலரும் அவரை அவமதிக்கும்படி நடந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து ஸ்ருத்திகாவுடன் நட்பாக பழகி வந்தவர் சும் தரங்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இப்போது வாக்குவாதம் நடக்கும் படி ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. அதில் ஸ்ருத்திகா கதறி அழுகிறார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இப்போது ஸ்ருத்திகா நினைக்கிறார்.

ஏற்கனவே ஸ்ருதிக்காவின் கணவர் அர்ஜூன் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது ஹிந்தி பிக் பாஸுக்கு அவர் சென்றது தவறு என்று கூறியிருந்தார். இப்போது ஸ்ருதிக்கா தேம்பித் தேம்பி அழுவதை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர்.

Trending News