கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன்னிடம் ரசிகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகின்றன.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான புத்தம் புது காலை எனும் அந்தலாஜி திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய்சேதுபதியுடன் லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஸ்ருதிஹாசன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றன.
